சிறுத்தை சிவாவின் பிறந்தநாள்
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான சிறுத்தை சிவாவிற்கு இன்று பிறந்தநாள். தனது 48வது பிறந்தநாளை கொண்டாடும் சிவாவிற்கு ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவர் சிறுத்தை சிவா. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அஜித்தை வைத்து நான்கு படங்கள் இயக்கியுள்ளார்.
கடைசியாக இவர் இயக்கத்தில் கங்குவா படம் வெளிவந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதியின் அப்பாவை பார்த்துள்ளீர்களா.. புகைப்படம் இதோ
அடுத்த படம் – சம்பளம்
இந்நிலையில், இயக்குநர் சிறுத்தை சிவா அடுத்ததாக ரஜினிகாந்துடன் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஏற்கனவே ரஜினியை வைத்து அண்ணாத்தே எனும் படத்தை சிவா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் கடந்த ஓரிரு திரைப்படங்கள் சரியாக போகவில்லை என்றாலும், முன்னணி இயக்குநராக வலம் வரும் சிறுத்தை சிவா, ஒரு படத்தை இயக்க ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

