ஷிவாங்கி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தங்களது திறமையை வெளிக்காட்டி வெள்ளித்திரையில் ஜொலித்து வருபவர்கள் பலர்.
அப்படி கனவோடு கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் ஷிவாங்கி.
அந்நிகழ்ச்சி அவருக்கு கொடுத்த வெற்றியை குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சி கொடுத்தது.
இந்த நிகழ்ச்சியால் ஷிவாங்கிக்கு நிறைய பட வாய்ப்புகளும் குவிந்துள்ளது, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் முதலில் நடித்திருந்தார்.
படங்கள் நடிப்பது, ரியாலிட்டி ஷோக்கள், இசைக் கச்சேரிகள், போட்டோ ஷுட் என செம பிஸியாக உள்ளார்.
பேட்டி
ஷிவாங்கி சமீப காலமாக தனது இன்ஸ்டாவில் கொஞ்சம் மாடர்ன் உடைகளை உடுத்து புகைப்படங்கள் வெளியிடுகிறார். அதற்கு இணையவாசிகள் சிலர் ஷிவாங்கி சினிமா வாய்ப்புக்காகத்தான் இப்படி போட்டோஸ் வெளியிடுகிறார் என கமெண்ட் செய்து வந்தனர்.
அதற்கு அவர், சில மோசமான கமெண்ட் வரும், அதற்கு நான் கவலைப்படுவது கிடையாது.
நான் மாடர்ன் உடை போட்ட போது வாய்ப்புக்காக ஆடைகளை குறைத்து விட்டேன், சினிமா வாய்ப்புக்காக ஆடைகளை அவுத்து பேட்டுவிட்டு திரியிறது என்றெல்லாம் திட்டினார்கள்.
முன்பு நான் கொஞ்சம் குண்டாக இருந்தேன், அப்போது மாடர்ன் உடை செட் ஆகாது என அணியவில்லை. இப்போது உடல் எடையை குறைத்துள்ளதால் மாடர்ன் உடைகளை அணிய வேண்டும் என்ற ஆசையால் அணிகிறேன் என கூறியுள்ளார்.