சிவாஜி கணேசன்
நடிப்பு என்று கூறினால் அதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டால், அந்த கதாபாத்திரங்கவே நடிப்பார் என்பதை விட, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிடுவார் என்பதே உண்மை.
அந்த அளவிற்கு நடிப்பின் மீது மிகப்பெரிய மரியாதையும், அன்பையும் வைத்திருந்த மாபெரும் கலைஞர் சிவாஜி கணேசன். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவர் மறைந்தாலும், அவருடைய நடிப்பு என்றுமே மறையாது என்பதை நாம் அறிவோம்.
இவருடைய 97வது பிறந்தநாளான இன்று ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து, அவருடைய புகழ் குறித்து பேசி வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் முறையாக ரூ. 1 கோடி சம்பளம் எப்போது வாங்கினார் என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.
1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய படம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படையப்பா. இப்படத்தில் ரஜினியின் தந்தையாக நடித்திருப்பார் சிவாஜி கணேசன். அந்த கதாபாத்திரத்தின் மரண காட்சி இன்றும் நம்முடைய மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அந்த அளவிற்கு மிகவும் எமோஷனலாக இருக்கும்.
மருத்துவமனையில் ரஜினிகாந்த்.. காரணம் என்ன? முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு
படையப்பா படத்தின் வியாபாரம் முடிந்த நிலையில், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சிவாஜி கணேசனுக்கு காசோலை (Check) கொடுத்துள்ளனர். இந்த காசோலையை சிவாஜியின் மூத்த மகனான நடிகர் ராம்குமார் வாங்கி பார்த்துள்ளார். அப்போது அந்த காசோலையில் ரூ. 1 கோடி சம்பளம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தனது தந்தை சிவாஜியிடம், இதில் ரூ. 1 கோடி என்று போடப்பட்டுள்ளது என கூறியுள்ளார். தயாரிப்பு தரப்பில் ஒரு பூஜ்யத்தை அதிகமாக போட்டிருப்பார்கள், ரூ. 10 லட்சம் தான் என்னுடைய சம்பளமாக என சிவாஜி கூறியுள்ளார்.
பின் தயாரிப்பாளருக்கு சிவாஜி கணேசன் போன் கால் செய்து இதுகுறித்து பேசியுள்ளார்.
காசோலையில் ரூ. 1 கோடி என தவறாக சம்பளம் போடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதற்கு தயாரிப்பாளர் தரப்பு, தவறாக போடவில்லை சார், சரியாக தான் போடப்பட்டுள்ளது, ரஜினிகாந்த் சார்தான் உங்களுக்கு ரூ. 1 கோடி சம்பளம் கொடுக்க சொன்னார் என கூறினார்களாம். இந்த விஷயம் நடந்த பிறகு, ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்து சிவாஜி கணேசன் கடிதம் கூட எழுதினாராம்.