சிவகார்த்திகேயன்
சின்னத்திரையின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து பின் வெள்ளித்திரையில் இன்று கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் நட்சத்திரம் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன் படம் உலகளவில் வசூலில் சக்கபோடு போட்டுகொண்டு இருக்கிறது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த எந்த ஒரு படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் அமரன் 3 நாட்களில் செய்த வசூல்.. மிகப்பெரிய சாதனை படைக்கும் சிவகார்த்திகேயன்..
மேலும் 3 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் இதுவரை நடித்துள்ள படங்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
100 கோடி வசூல் செய்த படங்கள்
முதலில் சிவகார்த்திகேயனின் ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படம் என்றால் அது டாக்டர் தான். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 102 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதன்பின் அறிமுக இயக்குனரான சிபி சக்ரவத்தி இயக்கத்தில் வெளிவந்த டான் படம் உலகளவில் ரூ. 105 கோடி வரை வசூல் செய்திருந்தது.
டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்களின் வரிசையில் தற்போது அமரன் படம் மூன்றே நாட்களில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இப்படம் கண்டிப்பாக ரூ. 200 கோடியை பாக்ஸ் ஆபிஸில் கடந்துவிடும் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.