சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் வெற்றிக்கு பின் இவர் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23வது படம் உருவாகி வரும் நிலையில், சிவகார்த்திகேயன் 25வது படத்திற்கான அறிவிப்பை கடந்த ஆண்டே படக்குழுவினர் அறிவித்தனர்.
நடிகர் சிவகுமாரின் சாதனை.. மகன் சூர்யாவின் உணர்ச்சிபூர்வ பதிவு
தற்போது இந்த படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதைக்களம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
காத்திருக்கும் அதிர்ச்சி
அதன்படி, கடந்த 1965-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போரில் உயிர்நீத்த ஒரு கல்லூரி மாணவனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் பராசக்தி திரைப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த மாணவரின் பெயர் இராசேந்திரன். தாய்மொழி காக்க இந்தி எதிர்ப்புப் போரில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான இந்த மாணவனின் கதை தான் பராசக்தி படம்.
இதில், இராசேந்திரன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதனால் படத்தின் இறுதியில் சிவகார்த்திகேயன் கொல்லப்படும் காட்சி இடம்பெறும் என கூறப்படுகிறது.