நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் அமரன் படம் பெரிய ஹிட் ஆனது. அதை தொடர்ந்து அவர் தற்போது கைவசம் பல முக்கிய படங்களை வைத்து இருக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்னொரு படம் ஆகியவற்றில் அவர் நடித்து வருகிறார்.
மகன் காதணி விழா
இந்நிலையில் சிவகார்த்திகேயன் மகன் பவனுக்கு இன்று காதணி விழா நடைபெற்று இருக்கிறது.
திருவாரூரில் இருக்கும் அவர்களின் சொந்த ஊரான திருவீழிமிழலையில் கோவிலில் இந்த விழா நடைபெற்று இருக்கிறது.
அங்கு சிவகார்த்திகேயன் உடன் அங்கிருப்பவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.