சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மதராஸி மற்றும் பராசக்தி ஆகிய இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் மதராஸி படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இதை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசத்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல்
ஓபன் டாக்
இந்த நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், “நீங்கள் நடித்த திரைப்படங்களில் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பீர்களா” என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “என்னுடைய திரைப்படங்களில் இருந்து இரண்டாம் பாகம் உருவாக்க விரும்பினால், மாவீரன் பகுதி-2ஐ செய்வேன், ஏனெனில் அது தனித்துவமான ஸ்கிரிப்ட்” என கூறியுள்ளார்.

