விஜய் – சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த GOAT திரைப்படம் உலகளவில் பட்டையை கிளப்பி வருகிறது.
இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ‘துப்பாக்கி பிடிங்க சிவா’ என நடிகர் சிவகார்த்திகேயனிடம் விஜய் சொல்லும் விஷயமும், ‘நீங்க வேற ஒரு முக்கியமான வேலையா போறீங்க, நீங்க அத பாருங்க சார், நான் இத பாத்துக்குறேன்’ என சிவகார்த்திகேயன் சொல்லும் வசனங்கள் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் இருந்து அறந்தாங்கி நிஷா விலகிவிட்டாரா? உண்மை இதுதான்
விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால், சினிமாவில் அவருடைய இடத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் தான் என்பது போல பேச துவங்கிவிட்டனர். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தனது அமரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக மலேஷியா சென்றுள்ளார்.
அடுத்த தளபதி
அப்போது அங்கு மேடையில் பேசிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயனை பார்த்து, ‘அடுத்த தளபதி’ என ரசிகர்கள் கோஷமிட்டனர். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் “ஒரே தளபதி தான், ஒரே தல தான், ஒரு உலகநாயகன் தான், ஒரே சூப்பர்ஸ்டார் தான்.
இந்த அடுத்த என்கிற வார்த்தைக்கு எல்லாம் இடமே கிடையாது. இவர்கள் அனைவரையும் பார்த்து தான் நான் சினிமாவிற்கு வந்தேன், அவர்களை போல் படங்களை ஹிட் கொடுக்கலாம். ஆனால், அவர்களை போலவே ஆகவேண்டும் என நினைப்பது சரி கிடையாது” என பேசியுள்ளார்.