முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வீட்டை உடைத்து உள்நுழைந்த நபர்கள்! பல கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணம் கொள்ளை

கல்னேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  புல்னேவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 5 கோடி ரூபாவிற்கும் அதிக  பெறுமதியுடைய பொருட்கள்  மற்றும் பணத்தினை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 7ஆம் திகதி கல்னேவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகளை அடுத்து குறித்த  6 சந்தேகநபர்களும் நேற்று முன்தினம்(14.12.2025) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று(16) தெரிவித்துள்ளது.  

போதைப்பொருட்கள் மீட்பு

இதன்போது  வீட்டை உடைத்து உள்நுழைந்த சந்தேகநபர்கள், பிராடோ ஜீப், தங்க நகைகள், பணம் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட,  மொத்தமாக 5கோடியே 72இலட்சத்து  68ஆயிரம் ரூபா பெறுமதியுடைய பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. 

வீட்டை உடைத்து உள்நுழைந்த நபர்கள்! பல கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணம் கொள்ளை | Six Arrested For Night House Robbery  

இதனையடுத்து, குருநாகல், மாவதகம மற்றும் வில்கமுவ பகுதிகளில் பொலிஸாரால் சோதனை நடத்தப்பட்ட நிலையில் குறித்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஹெரோயின்,  ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட 4 ஜோடி கையுறைகள்,  4  கூர்மையான கத்திகள், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு வான் மற்றும் ஒரு லொறி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேக நபர்களால் திருடப்பட்ட பிராடோ ஜீப் மீகலேவ பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டை உடைத்து உள்நுழைந்த நபர்கள்! பல கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணம் கொள்ளை | Six Arrested For Night House Robbery

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 59 லட்சத்து 39ஆயிரம் ரூபாய் (5,939,000/-) மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து பெறப்பட்ட பல சொத்துக்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  நேற்றையதினம்(15.12.2025) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவர்களை தடுப்புக்காவலில் வைக்க  கெகிராவ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.