குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் நடிப்பில் அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
சரிகமப சீசன் 4 அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா.. ரசிகர்கள் ஆதரவு
இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். நாளை இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில் சுவாரஸ்யமான தகவல்கள் பல வெளியாகின்றன.
கேமியோ ரோலில் எஸ்.ஜே. சூர்யா
அதில், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா கேமியோ ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை.
இந்த நிலையில், பல வருடங்களுக்கு முன்பே அஜித்தின் படத்தில் ஒரே ஒரு காட்சியில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். அஜித் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆசை.
இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா துணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அப்போது ஒரே ஒரு காட்சியில் அவர் ஆட்டோ டிரைவாக நடித்துள்ளார். அந்த காட்சியின் புகைப்படம் இதோ..