எதிர்வரும் பொதுத் தேர்தலில் சரத் பொன்சேகா உள்ளிட்ட மூன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட இடமளிப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்டதன் காரணமாக குறித்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக இந்தத் தீ்ர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
அதன் பிரகாரம் எந்த வொரு கட்டத்திலும் சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன மற்றும் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் இடமளிப்பதில்லை என்று உறுதியான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
உயர் மட்ட கலந்துரையாடல்
அதே நேரம் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன ஐக்கிய மக்கள் சக்தியின் பியகம தொகுதி அமைப்பாளராக உள்ள நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
இவ்விடயம் தொடர்பில் கட்சியின் உயர் மட்டத்தில் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ள போதிலும் இதுவரை தீர்க்கமான முடிவு ஒன்றும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.