பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில்(sjb) ஏற்பட்டுள்ள உள் நெருக்கடி காரணமாக, அதன் முக்கிய தலைவர்கள் பலரை மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் மற்றும் தலைவர் பதவிக்கு புதியவர்கள் நியமிக்கப்பபடவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விவகாரம் குறித்து அக்கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.
புறக்கணிக்கப்பட்ட இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
குறிப்பாக சமீபகாலமாக, கட்சியின் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்(Imtiaz Faqir Makar) புறக்கணிக்கப்பட்டு, தேசியப்பட்டியலுக்கு இளையவர் ஒருவர் நியமிக்கப்பட்டதையடுத்து நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளது.
நான்கு தேர்தல்களிலும் படுதோல்வி
கட்சியின் உள்விவகாரங்களை நிர்வகிக்கும் மூன்றாவது சக்திக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கட்சி ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் எதிர்கொண்ட 4 பிரதான தேர்தல்களிலும் படுதோல்வியடைந்துள்ளமை எம்.பி.க்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.