ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) முரண்பட்ட அக்கட்சியின் மகளிர் அணியின் தேசிய
அமைப்பாளரான ஹிருணிகா பிரேமச்சந்திரவை (Hirunika Premachandra) கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச
சமரசப்படுத்தியுள்ளதாக (Sajith Premadasa) தகவல் வெளியாகியுள்ளது.
இதன் ஓர் அங்கமாகவே ஹிருணிகாவின் பதவி விலகல் கடிதத்தை கட்சி ஏற்கவில்லை என்று
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும (Ranjith Madduma Bandara) பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக
ஹிருணிகா பிரேமச்சந்திர கடந்த 13ம் திகதி அறிவித்திருந்தார்.
பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார்
இது தொடர்பான பதவி விலகல்
கடிதத்தைக் கட்சியின் பொதுச்செயலாளருக்கு அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே ஹிருணிகாவை நேரில் அழைத்து பேசி கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சமரசப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சந்திப்பின் பின்னர் ஹிருணிகா
பிரேமச்சந்திரவும், கட்சியின் பொதுச்செயலாளரும் இணைந்து கூட்டாக ஊடக சந்திப்பை
நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.