உள்ளூராட்சி அமைப்புகளில் கூட்டு நிர்வாகங்களை உருவாக்குவது தொடர்பில்
நடைபெற்ற எதிர்க்கட்சி பொதுச் செயலாளர்கள் கூட்டத்தில், ஐக்கிய மக்கள்
சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பங்கேற்காமை குறித்து
விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தாம் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக அந்த நிகழ்வில் கலந்து கொள்ள
முடியவில்லை என்று பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
இருப்பினும், எதிர்கால கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெறாத உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டு
நிர்வாகங்களை உருவாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் உறுதிபூண்டுள்ளன என்று அவர்
குறிப்பிட்டுள்ளார்.

