பொதுப் போக்குவரத்துத் துறையில் வாகனங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயமாக்குவது உட்பட பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு ஆதரவு வழங்க எதிர் கட்சி தரப்பு முன்வந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான இதற்கான உறுதியை வழங்கியுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையை கட்டியெழுப்புவதற்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் ஆதரவைப் பெற நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று சபையில் தெரிவித்திருந்தார்.
ஜகத் விதான
இதற்கு பதில் வழங்கும்போதே ஜகத் விதான மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சு ஆகியவற்றின் செலவினத் தலைப்புகள் தொடர்பான விவாதங்கள் நேற்று நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டன.
இதன்போது பிமல் ரத்நாயக்க நாட்டின் ரயில் சேவையை பொதுமக்களுக்கு கவர்ச்சிகரமான ரயில் சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் விருப்பம் என்றும் கூறினார்.
இலங்கை போக்குவரத்து சபையை கட்டியெழுப்புவதற்கு, பேருந்து துறையில் நிபுணரான சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் ஆதரவைப் பெற நம்புவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது தெரிவித்திருந்தார்.