முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இழுத்தடிக்கப்படும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள்! அரசின் வெற்று கோஷம் அம்பலம்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அதிபர் தேர்தல் முடியும் வரை இழுத்தடிக்கப்படுமா எனும் சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.   

இந்த நடவடிக்கை காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணை நிதியுதவியை இலங்கை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாமென இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பில் தற்போது அரசாங்கம் மூன்று தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுத்து வருகிறது.

கடன் மறுசீரமைப்பு

இந்த மூன்று தரப்பினருடனான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும்.

இழுத்தடிக்கப்படும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள்! அரசின் வெற்று கோஷம் அம்பலம் | Sl Gvt Drags Debt Restructuring President Election

நடைமுறை சாத்தியமற்ற திட்டங்களை செயல்படுத்தும் அரசு! சுட்டிக்காட்டும் ஜி.எல். பீரிஸ்

எனினும், அரசாங்கத்துக்கும் இந்த தரப்பினருக்குமிடையில் மாற்று கருத்துக்கள் காணப்படுகிறது. இதனால் இணக்கப்பாடை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்பதை அறிவித்து தற்போது இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளன. இதுவரை கடன் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை சரிவர முன்னெடுக்க அரசாங்கம் தவறியுள்ளது.

அதிபர் தேர்தல் 

அத்துடன், கொரோனா தொற்று காரணமாக பல நாடுகள் வங்குரோத்து அடைந்தன. எனினும், இந்த நாடுகள் இரண்டு ஆண்டுகளாக கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை இழுத்தடிக்கவில்லை.

இழுத்தடிக்கப்படும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள்! அரசின் வெற்று கோஷம் அம்பலம் | Sl Gvt Drags Debt Restructuring President Election

நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கும் விஜேதாச ராஜபக்ச! எச்சரிக்கும் மொட்டு கட்சி

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள உடனடியாக நடவடிக்கை எடுத்தன. இவ்வாறாக இலங்கையும் செயல்பட்டிருக்க வேண்டும்.

இந்த நிலையில், அதிபர் தேர்தல் வரை கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் இழுத்தடிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். எனினும், அனைவரும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுகின்றமை சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணை கடனுதவி கிடைக்கப் பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தலாம்” என தெரிவித்துள்ளார். 

இரண்டாக பிளக்கும் ஆபிரிக்கா கண்டம்: பூகோள அமைப்பில் வியத்தகு மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்