ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மொட்டுக் ) கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் குறித்த அறிவிப்பு மேதினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கோட்டாபய ஆட்சி பொதுமக்களால் கவிழ்க்கப்பட்ட பின்னர், மொட்டுக் கட்சி தற்போது மீண்டும் புத்தூக்கம் பெற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, கிராமங்கள் தோறும்- விகாரைகள் தோறும் சென்று சிங்கள பௌத்த வாக்குகளை மீண்டும் தமது கட்சிக்காக திரட்டிக் கொள்வதில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இருவேறு கருத்துக்கள்
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை ஆதரிப்பதா? இல்லை தனித்துக் களமிறங்குவதா என்பது தொடர்பில் மொட்டுக் கட்சிக்குள் அண்மைக்காலமாக இருவேறு கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன.
அதன் அடிப்படையில் இதுவரை காலமும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் குறித்து தெளிவாக மொட்டுக் கட்சி அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை
எனினும் கட்சியினரை ஊக்கப்படுத்தும் வகையில் எதிர்வரும் மே தின பேரணி நிகழ்வின் போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான மொட்டுக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் வேட்பாளர் குறித்த விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |