முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அநுர அரசாங்கத்துக்கு, சிறிலங்கா பொதுஜன பெரமுன சவால் விடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் உறுப்பினர் ஜானக வம்குப்புர(janaka wakkumbura),
உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிந்துவிட்டது. எனினும், மாகாணசபை தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை. அது நடத்தப்பட வேண்டும். அரசாங்கத்தக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே, அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய முடியும்.
அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்
எதிரணிகள் ஒன்றிணைந்து கோரினால் தேர்தலை வழங்க தயார் என அரச தரப்பில் கூறப்பட்டது. ஒன்றாக அல்ல தனித்து போட்டியிடுவதற்குகூட நாம் தயார். முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்.

அரசாங்கம் கூறுவதை நம்புவதற்கு மக்கள் தயாரில்லை என்பது தேர்தல்மூலம் நிரூபணமாகும் என்றார்.

