முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மொட்டுவிற்கு சவாலாகும் புதிய கூட்டணி : தலைவராகிறார் மகிந்தவின் சகா

புதிய இணைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைவர் பதவியை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு (Dinesh Gunawardena) வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (20) காலை நடைபெற்ற போது கூட்டணியின் நிர்வாகிகள், நிர்வாக சபை மற்றும் பிற கட்சிகளின் நிர்வாகிகளை ஈடுபடுத்துவது குறித்து நீண்ட விவாதம் நடந்துள்ளது.

எதிர்வரும் தேர்தலில் இந்த புதிய கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதியை ஆதரிக்கும் மக்கள் கட்சியின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வரும் பொது மக்கள் முன்னணியின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கும் இந்த புதிய கூட்டணி திறக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு 

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (2024.08.20)
கொழும்பில் (Colombo) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் இந்த
புதிய அரசியல் கூட்டணியின் மூலம் வேட்பாளர்களை முன்வைக்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் கட்சி

பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) ஆகியோரின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

மொட்டுவிற்கு சவாலாகும் புதிய கூட்டணி : தலைவராகிறார் மகிந்தவின் சகா | Slpp Mps Who Support Ranil A New Political Party

இந்த கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு
ஆதரவாக கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கும் மேற்பட்ட
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன் உருவாகவுள்ள புதிய அரசியல் கூட்டணிக்கு பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் எதிர்காலத்தில்
உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணிக்கான அரசியலமைப்பு ஏற்கனவே
தயாரிக்கப்பட்டு விட்டதால், அதன்படி செயற்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.