சிறிலங்கா பொதுஜன(SLPP) பெரமுனவின் கொள்கை இலக்கு மற்றும் புத்தாக்க வேலைத்திட்ட வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(2) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச ( Namal Rajapaksa )தலைமையில் கொழும்பு (Colombo) ஐ.டி.சி. ரத்னதீப வளாகத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெறவுள்ளது.
அங்கு ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2025 முதல் 2035 வரையிலான கட்சியின் வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக பிரபலப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதுவர்களுக்கும் அழைப்பு
இந்த விசேட நிகழ்விற்கு வெளிநாட்டு தூதுவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.