Courtesy: Sivaa Mayuri
தேர்தல் விதிமுறைகளை மீறும் உள்ளடக்கத்தை நீக்கும் உறுதிமொழியை சமூக ஊடக தள இயக்குநர்கள், தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்களுக்கு எதிரான தகவல்களை வெளியிடுவது குறித்து யூடியூப், ஃபேஸ்புக், டிக்டொக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.
ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஏதேனும் பாதிப்பான விடயங்கள் பதிவிடப்பட்டிருந்தால் அவை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்றப்படும் என்ற உத்தரவாதம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டதாக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாதிப்பான செய்திகள்
இருப்பினும், எவரையும் புண்படுத்தும் அல்லது பாதிப்பான செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டால், தேர்தல் காலத்திற்குள் சமூக ஊடகங்களின் கணக்கு இடைநிறுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.