தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள
கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர்
பா.அரியநேந்திரன் சார்பான பரப்புரை கோப்பாய் தொகுதியில் அதி
தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
தமிழ் பொது வேட்பாளர் சார்பான பரப்புரை
அந்த வகையில், கோப்பாய் பகுதியிலும், வட்டுக்கோட்டை பகுதியிலும் நேற்று(05) காலை முதல் பிற்பகல் 6:00 மணிவரை தமிழ் பொது வேட்பாளர்
சார்பான பரப்புரை நடைபெற்றுள்ளது.
சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநரும் சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம்
தலைமையில் இடம்பெற்ற பரப்புரையில் வட மாகாண கடற்றொழிலாளர் அமைப்பு பிரதிநிதிகளும்
இணைந்துள்ளனர்.