சாலமன் பாப்பையா
பட்டிமன்றம் என சொன்னாலே நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் சாலமன் பாப்பையா. பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் பேராசிரியரான சாலமன் பாப்பையா, தமிழில் வெளிவந்த சிவாஜி, பாய்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மதகஜராஜா படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மனைவி மரணம்
இந்த நிலையில், சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயா பாய் (வயது 88) நேற்று காலமானார். சாலமன் பாப்பையா – ஜெயாபாய் தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
வயது மூப்பு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலை மறைந்துள்ளார். மதுரையில் உள்ள இல்லத்தில் அவரது உடலுக்கு, அமைச்சர் தியாகராஜன், எம்.எல்.ஏ தாம்ப்ராஸ் மாநில துணைத் தலைவர் இல.அமுதன் உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் மக்கள் செலுத்தினார்கள்.
மாலையில் இறுதி ஊர்வலம் நடைபெற்ற நிலையில், தத்தனேரி கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.