சில ஊடகங்கள் நாடு தூய்மையடைவதனை விரும்பவில்லை என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு தூய்மையடைவதனை விரும்பவில்லை
சில அலைவரிசைகளின் பெயர் கதிரவனின் பெயரில் இருந்தால் அவை இருளையே பரப்புவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் நாட்டு மக்கள் நாட்டை தூய்மைப்படுத்த வேண்டுமென்றே கோருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களும் தூய்மையடைந்தால் நல்லது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்கள் என்ன சொன்னாலும் போகும் பயணத்தை நிறுத்தப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.