நடிகர் சோனு சூட் தென்னிந்திய படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்து வருபவர். அருந்ததி படம் தொடங்கி மதகஜராஜா படம் வரை அவர் அவரது படங்கலை பட்டியலிட்டால் பெரிய லிஸ்ட் வரும்.
சோனு சூட் கொரோனா காலத்தில் இருந்து மக்களுக்கு பல விதங்களில் உதவி வருகிறார். அதனால் தினமும் அவர் வீட்டு வாசலில் உதவி கேட்டு ஒரு நீண்ட வரிசையில் மக்கள் நிற்கிறார்கள். அவர்களுக்கு முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார் சோனு சூட்.
வீடு விற்பனை
இந்நிலையில் சோனு சூட் தனக்கு மும்பையில் இருந்த ஒரு சொகுசு அபார்ட்மெண்ட் வீட்டை ஒரு பெரிய தொகைக்கு விற்பனை செய்து இருக்கிறார்.
8.10 கோடி ரூபாய்க்கு அவர் வீட்டை விற்று இருக்கிறார். அந்த அப்பார்மெண்டை 2012ல் அவர் 5.16 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தார்.
13 வருடங்களில் அவருக்கு 3 கோடி ருபாய் அளவுக்கு லாபம் கிடைத்து இருக்கிறது. இந்த தொகை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தொகை மட்டுமே.