நஸ்ரியா நஸிம், பசில் ஜோசப் நடிப்பில் திரில்லர் படமாக வெளியாகியுள்ள Sookshmadarshiniயின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
பிரியதர்ஷினி (நஸ்ரியா) தனது குழந்தை என அழகான குடும்ப அமைப்புடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.
அவருக்கு பக்கத்துக்கு வீட்டிற்கு மேனுவல் (பசில் ஜோசப்) தனது தாயுடன் புதிதாக குடிவருகிறார்.
நாக சைதன்யாவுடன் கைகோர்த்து வந்த சோபிதா.. கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்
மேனுவல் செய்யும் சில விஷயங்கள் பிரியதர்ஷினிக்கு விசித்திரமாக தோன்றுகிறது. தன் வீட்டின் ஜன்னலில் இருந்து சந்தேக கண்ணோடு அவரை பார்க்கிறார்.
ஒருநாள் இரவில் மேனுவலின் தாய் காணாமல் போகிறார். அதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.
படம் பற்றிய அலசல்
பிரியதர்ஷினியாக நடித்திருக்கும் நஸ்ரியா CBI அதிகாரி போல பக்கத்துக்கு வீட்டை வேவு பார்க்கும் காட்சிகள் கலாட்டா ரகம்.
அதிலும் அவரது அண்டை வீட்டு பெண்களை கூட்டு சேர்த்து அவர் செய்யும் விஷயம் சீரியசாக இருந்தாலும், அங்கேயும் காமெடியை வைத்து இயக்குநர் சிரிக்க வைக்கிறார்.
பசில் ஜோசப் முதல் பாதிவரை என்ன செய்கிறார் என நம்மை யோசிக்க வைக்கிறார்.
ஆனால் அவர் ஏதோ ஒரு பெரிய தப்பு செய்வதை தனது முகபாவனைகளில் காட்டுகிறார்.
நெகட்டிவ் கேரக்டரில் எந்த அளவு அவர் மிரட்டுவார் என்பதை இப்படத்தில் காட்டியுள்ளார்.
நஸ்ரியாவின் குழந்தை கதாபாத்திரம் ஹெஸ்சா ஒரு காட்சியில் செல்போன் கேம் குறித்து கேட்கும்போது தியேட்டரில் சிரிப்பலை நிற்க நேரமாகிறது.
எம்.சி.ஜிதின் இப்படத்தை Rear Window ஆங்கில படத்தின் பாதிப்பில் இயக்கியுள்ளது தெரிகிறது.
கிளைமேக்சில் வரும் ட்விஸ்ட் மிரட்டல்.
ஷரன் வேலாயுதன் நாயரின் கேமரா, கிறிஸ்டோ சேவியரின் இசை மற்றும் சாமன் சாக்கோவின் எடிட்டிங் அருமை.
க்ளாப்ஸ்
மலையாள படத்திற்கே உரித்தான விறுவிறுப்பான திரைக்கதை
நஸ்ரியா, பசில் ஜோசப்பின் நடிப்பு
சீரியஸான காட்சிகளிலும் சிரிக்க வைத்திருப்பது
பல்ப்ஸ்
ஒன்றிரண்டு இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங்
மொத்தத்தில் திரில்லர் பட விரும்பிகள் குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம் இந்த மைக்ரோஸ்கோப்பை (Sookshmadarshini).