பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8, தமிழ் சின்னத்திரையில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் ஒரு நிகழ்ச்சி.
7 சீசன்கள் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இந்த 8வது சீசனில் விஜய் சேதுபதி களமிறங்கியுள்ளார்.
எப்போதும் நிகழ்ச்சிக்கு வரும் விமர்சனங்களை தாண்டி விஜய் சேதுபதி நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கும் மோசமான விமர்சனங்கள் வருகின்றன.
ஆனால் அவர் நாம் எதை செய்தாலும் விமர்சனம் செய்வார்கள், எதை பற்றியும் கவலைப்பட கூடாது என கூறியிருந்தார்.
சௌந்தர்யா பேச்சு
இந்த நிலையில் பிக்பாஸ் 8வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் சௌந்தர்யா தான் சந்தித்த MeToo விவகாரம் குறித்து கூறியுள்ளார். அதில் அவர் நேற்று, நான் பல படங்களுக்கு ஆடிசன் சென்றுள்ளேன்.
அப்படி ஒரு இடத்திற்கு சென்ற போது ஒருவர் ஒரு காட்சியில் நடிக்க சொன்னார்.
அவர் ஹீரோ போல் நடிக்கிறேன் என கூறி எல்லை மீறி நடக்க தொடங்கிவிட்டார், அந்த நிகழ்வை என்னால் இன்று வரை மறக்க முடியவில்லை என கண்ணீருடன் அவர் கூறியது பெரும் வருத்தத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.