தென்கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol ) கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் இன்று (15.1.2025) புதன்கிழமை அதிகாலை அவர் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில். தென் கொரிய ஜனாதிபதி ( South Korea) யூன் சுக் இயோல் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் விவகாரத்தில் ஜனவரி 3 ஆம் திகதி கைது செய்ய முற்பட்டபோதும், அவரது ஆதரவாளர்களின் போராட்டத்தால் கைது செய்ய முடியவில்லை.
பதாகைகளுடன் போராட்டம்
இந்த நிலையில், அவரை கைது செய்யும் இரண்டாவது முயற்சியில் புதன்கிழமை அதிகாலையில் யூன் சுக் இயோலின் வீட்டின்முன் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கூடினர்.
ஆனால், கைது நடவடிக்கை குறித்து முன்னரே அறிந்ததைப்போல, யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் 6500 பேர் ஒன்றுகூடி பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.
மேலும், மனிதச் சங்கிலி போராட்டமும் நடத்தினர்.
போராட்டம் நடத்தியவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்களே.
இதனைத் தொடர்ந்து, யூன் சுக் இயோலின் வழக்குரைஞரும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.எவ்வாறாயினும் தடைகளை மீறி அவர் கைது செய்யப்பட்டார்.