ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் மாத்திரமே நாட்டின் வங்குரோத்தை மாற்றியமைக்க தற்போதைய
அரசுக்கு இருக்கும் ஒரே மாற்று வழியாகும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மஹரகமவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடுத்தர தொழில் முனைவோர்
“நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளன.
நாட்டுக்குத் தீர்வுகளை வழங்கும் பொறுப்பு வெற்றி பெற்ற அணியினருக்கும் போலவே
தோற்கடிக்கப்பட்ட அணியிருக்கும் காணப்படுகின்றன.
இந்த பொறுப்பை நிறைவேற்ற
அனைவரும் தயாராக வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும்
சவால்களுக்கு தீர்வுகளை வழங்கும் குழுவாக அவர்கள் மாற வேண்டும்.
வெற்றி பெற்றவர்களிடம் மட்டும் பொறுப்புகளை ஒப்படைப்பது வங்குரோத்தான
நாட்டுக்கு ஏற்புடையதல்ல.
முன்னோடியான எதிர்க்கட்சி
இதற்காக அனைவரும் கைகோர்க்க வேண்டும். நாட்டைகே
கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் எதிர்க்கட்சி முன்னோடியான
வேலைத்திட்டத்தைக் கொண்டிருக்கின்றது.
அதிலிருந்து பின்வாங்க முடியாது.
இந்நாடு அனைவருக்கும் சொந்தமானது.
பிரச்சினைகளைத் தீர்க்கும் சக்தியாகவே ஐக்கிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில்
போட்டியிடுகின்றது. இந்த வெற்றி பொது வெற்றியாக அமைய வேண்டும்” என்றார்.