Courtesy: Sivaa Mayuri
நாட்டில் தற்போது நிலவும் பாதகமான காலநிலை குறித்து தமிழ் பேசும் மக்களுக்கு தகவல் தெரிவிக்க விசேட பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தகவல்கள் மற்றும் உதவி பெற்றுக்கொள்ளலாம் என்று இலங்கை பொலிஸின் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வெளியான தகவல்கள்
‘107’ என்ற விசேட தொலைபேசி இலக்கத்தின் மூலம் பொதுமக்கள் தமக்குரிய விடயங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தொடர்ந்தும் பாதகமான காலநிலையால், மக்கள் கஸ்டங்களை எதிர்கொண்டு வருவதாக நாடளாவிய ரீதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.