முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொட்டகலையில் ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட சந்திப்பு

 தோட்ட வைத்திய அதிகாரிகள்(EMO), தோட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள்(EWO) மற்றும் சிறுவர் பாராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்கள்(CCO) ஆகியோகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்று(06.07.2024) கொட்டகலை CLF வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 600ற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

காப்புறுதி திட்டம்

அத்துடன், வருகை தந்த உத்தியோகத்தர்களினால் தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக அமைச்சரிடம் நேரடியாக தெரிவித்துள்ளனர். 

கொட்டகலையில் ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட சந்திப்பு | Special Discussion Jeevan Thondaman At Kotagala

இதன்போது அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மத்தியில் கருத்துதெரிவித்த அமைச்சர், தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் செயற்பாடு போன்று உங்களுடைய சம்பள அதிகரிப்பிற்கும் நான் உறுதுணையாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் தற்போது தோட்டங்களில் உத்தியோகத்தர்களாக கடமை புரிந்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும் அமைச்சினூடாக வீடமைப்பு திட்டத்தினையும், காணியினை பெற்றுத்தருவதாகவும், தோட்டதொழிலாளர்களுக்கு போன்றே உங்களுக்கும் காப்புறுதி திட்டத்தினையும் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.

சுமார்1500 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள 26,000 சிறுவர்களுக்கும் ஊட்டச்சத்துள்ள காலை உணவு வழங்குவதற்காக புதிய வேலைத்திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டகலையில் ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட சந்திப்பு | Special Discussion Jeevan Thondaman At Kotagala

தோட்டப்புற மாணவர்கள் கல்வி கற்றப்பின்னர் அரச வேலைகளை தவிர்த்து தனியார் துறை மற்றும் சுயத்தொழில்களிலும் ஈடுபட ஆயத்தமாக இருக்குமாறு தாங்களும் பிள்ளைகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், இ.தொ.கா தேசிய அமைப்பாளர் சக்திவேல், பிரதி தலைவர் கணபதி கணகராஜ், அமைச்சரின் ஒருங்கினைப்பு செயலாளர் அர்ஜூன், ஹட்டன் பிராந்திய மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் ரனசிங்க மற்றும் பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

கொட்டகலையில் ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட சந்திப்பு | Special Discussion Jeevan Thondaman At Kotagala

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.