தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் (Senthil Thondaman) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் (S. Sritharan) இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது கிழக்கு மாகாண ஆளுநரின் மாளிகையில் நேற்று(19) நடைபெற்றுள்ளது.
வலுவான நட்புறவு
இதன்போது பெருந்தோட்டத் தமிழர்களுக்கும் வடக்கு மற்றும் கிழக்குத் தமிழர்களுக்கும் இடையில் வலுவான நட்புறவை வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் ராஜதுரை மற்றும் ஆலோசகர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.