Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் பொலிஸ் திணைக்களத்தினர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) இடம்பெறவுள்ளது.
இதன்போது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இந்தக் கூட்டமானது தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குழுவுடன் நடத்தப்படவுள்ளது.
தேர்தலுக்கான பாதுகாப்புத் திட்டம்
இதன்போது பொதுத் தேர்தலுக்கான ஒட்டுமொத்த பாதுகாப்புத் திட்டம், வேட்பாளர் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் மாவட்டச் செயலகங்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேசப்படவுள்ளன.
அத்துடன், தேர்தல் சட்டங்களை மீறுவதைத் தடுப்பதற்கான உத்திகளில் ஒருமித்த கருத்தை எட்டுவதும் இன்றைய சந்திப்பின் நோக்கமாக அமைந்துள்ளது