அருந்ததி
தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று அருந்ததி. ஹாரர் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

அனுஷ்கா என்றால் முதலில் அனைவருக்கும் நினைவுக்கு வரும் படமும் அருந்ததிதான். இப்படத்தில் ஜக்கம்மா என்கிற கதாபாத்திரத்தில் அனுஷ்காவின் நடிப்பு மிரட்டலாக இருக்கும். மேலும் இவருடன் இணைந்து சோனு சூட், மனோரமா, சாயாஜி ஷிண்டே ஆகியோர் நடித்திருந்தனர்.

2009ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் அன்றைய காலகட்டத்திலேயே ரூ. 68.50 கோடி உலகளவில் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
ரீமேக்
இந்த நிலையில், அருந்ததி படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் இப்படம் இந்தியில் உருவாகிறது.

இப்படத்தில் கதையின் நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளாராம். மேலும் மோகன் ராஜா இப்படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

