ஸ்ரீலீலா
தெலுங்கு சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. தனது நடனத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்ரீலீலா தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.
மீனாவிடம் நகையை பற்றி கேட்ட பாட்டி, ஷாக்கில் விஜயா மற்றும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
தமிழில் இவர் எப்போது அறிமுகமாக போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.
ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், குறுகிய காலகட்டத்தில் சென்சேஷனல் நாயகியாக மாறியுள்ள நடிகை ஸ்ரீலீலாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
அதன்படி இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 5 முதல் ரூ. 10 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் நடிகை ஸ்ரீலீலா தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.