இந்தியாவிலிருந்து (India) அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு தொடர்ச்சியாக வருகை தருகின்றனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 21,293 ஆக பதிவாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
குறித்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவில் இருந்து மொத்தம் 6,014 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ள நிலையில் இது 28.2% ஆகும்.

மேலும், ஜூன் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) 1,884 பேரும், சீனாவிலிருந்து (China) 1,277 பேரும், மாலைதீவு நாட்டிலிருந்து 1,173 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1 முதல் ஜூன் 5 வரை இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,051,096 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 210,074 பேர் இந்தியாவிலிருந்தும், 110,818 பேர் ரஷ்யாவிலிருந்தும், 98,158 பேர் இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மே மாதத்தில் மொத்தம் 132,919 வெளிநாட்டினர் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் 2024 மே மாத தரவுகளுடன் ஒப்பிடுகையில் 18.5% அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

