மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தற்போதைய அரசாங்கம் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றது.
சிங்கப்பூரில் இருக்கும் அர்ஜூன் மகேந்திரன், அண்மையில் இலங்கையில் இருக்கும் தன்னுடைய நண்பரொருவரை தொடர்பு கொண்டு பேசிய விடயங்களும் சமூக ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தது.
இதனையடுத்து, அவரை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை அநுர அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியையும் நாடியுள்ளனர்.
இதேவேளை, அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் உள்ள சிக்கல் மற்றும் இந்த விவகாரத்தில் ரணில் ஏன் அதிகமாக விமர்சிக்கப்படுகின்றார் என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய இப்படிக்கு அரசியல்,

