முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எவருக்கும் அடிபணியக்கூடாது : இலங்கைக்கு சீனா ‘அட்வைஸ்’

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இலங்கை அடிபணியக் கூடாது, குறிப்பாக நாட்டின் பொருளாதார நிலைமையை சில தரப்பினர் பயன்படுத்திக் கொள்ள முயலும் போது, ​​இலங்கை (sri lanka)சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பேண வேண்டும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் சென்ஹோங் (Chi Chenhong) தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சீனாவின்(china) நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சீனத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஏனைய நாடுகளின் உதவி தேவை என சில தரப்பினர் இலங்கை அதிகாரிகளை நம்ப வைத்துள்ளதாகவும் அது சரியல்ல எனவும் தூதுவர் சென்ஹோங் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் உறவைப்பேணவேண்டும்

இலங்கையர்கள் தன்னம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்றும், சீனா போன்ற நட்பு நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

எவருக்கும் அடிபணியக்கூடாது : இலங்கைக்கு சீனா ‘அட்வைஸ்’ | Sri Lanka Does Not Want To Bow Its Head To Anyone

இலங்கை தொடர்பில் சீனாவுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லை என்றும், இலங்கை ஒரு சுதந்திர நாடாக மாறுவதற்கும், வெளிநாடுகளின் அழுத்தங்களைத் தாங்குவதற்கும் சீனாவின் ஆதரவு பயனுள்ளதாக இருக்கும் என சீனா உறுதியாக நம்புவதாகவும் சென்ஹோங் கூறினார்.

 இலங்கைக்கு புதிய அத்தியாயம் ஆரம்பம்

புதிய அரசாங்கத்தை நியமித்ததன் மூலம் இலங்கை புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளதாகவும், இலங்கையின் எதிர்காலத்தில் சீனா வலுவான நம்பிக்கையை கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவருக்கும் அடிபணியக்கூடாது : இலங்கைக்கு சீனா ‘அட்வைஸ்’ | Sri Lanka Does Not Want To Bow Its Head To Anyone

சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு சீனாவின் கோரிக்கையை கடந்த அரசாங்கம் நிராகரித்ததன் மூலம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கப்பல்களை அனுமதிக்காததால் நெருக்கடி

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பலமான உறவுகள் இருந்தும் கடந்த அரசாங்கம் இவ்வாறான நிலைப்பாட்டை எடுத்தமையே இதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நிராகரித்த கோரிக்கைக்கு மாலைதீவு(maldives) அரசாங்கம் அனுமதி வழங்கியதாகவும் சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

எவருக்கும் அடிபணியக்கூடாது : இலங்கைக்கு சீனா ‘அட்வைஸ்’ | Sri Lanka Does Not Want To Bow Its Head To Anyone

இலங்கைக்கு இலாபம் இல்லாத ஆனால் அதிகளவு செலவாகும் திட்டங்களுக்கு சீனா பணம் செலவழிப்பதாக சில தரப்பினர் குற்றம் சுமத்திய போதிலும், கடந்த அரசாங்கங்களின் கோரிக்கைக்கு அமைவாகவே சீனா அந்த திட்டங்களுக்கு பணத்தை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

முந்தைய அரசாங்கங்கள் கோரியபடி அதிக பணம் செலவழிக்கும் திட்டங்களில் சீனா பணத்தை முதலீடு செய்யும் போது, ​​அந்தத் திட்டங்களால் லாபம் பெறக் கோரும் அரசாங்கங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சென்ஹோங் கூறினார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.