முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்திய சிங்கள மக்கள்

தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீது சிங்கள பொது மகன் ஒருவர் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தனது உறவினர்களை இழந்த நபர் ஒருவர், தனது கோபத்தினை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

நீர்கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார்.

பாதிக்கப்பட்டவர்களின் கோபம்

இதன்போது குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அரசியல்வாதிகள் அறிந்திருந்த போதும் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட நபர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அநுரவிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்திய சிங்கள மக்கள் | Sri Lanka Easter Bombings Anura Meet People

எனினும் அவரின் ஆதங்கத்தை பொறுமையாக கேட்ட ஜனாதிபதி, தமது கட்சிக்கு இது குறித்து எதுவும் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் சில அரசியல்வாதிகளுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் இந்த விடயம் தெரிந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இவ்வாறான மோசமான தாக்குதல்கள் இலங்கையில் நடைபெறலாம் இருக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

அரசியல்வாதிகள் திருடர்கள்

எனினும் தனது கோபத்தை வெளிப்படுத்திய குறித்த நபர்,

அநுரவிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்திய சிங்கள மக்கள் | Sri Lanka Easter Bombings Anura Meet People

அரசியல்வாதிகள் அனைவரும் திருடர்கள். யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை. ஆனாலும் இம்முறை ஜனாதிபதி உங்களுக்கே வாக்களித்தேன். எனினும் அனைவரும் தங்கள் நலனுக்காகவே உள்ளனர். எங்களை நாய்களை போன்று சோதனையிடுகின்றார்கள். என் கண் முன்னே பிள்ளைகளையும் தாய் தந்தையும் இழந்தேன். உங்களால் நான் இழந்தவர்களை மீளவும் கொண்டு வர முடியுமா? எங்கள் இழப்புகளை ஈடு செய்ய முடியுமா?” என வினவியுள்ளார்.

மற்றுமொரு பெண் கருத்து வெளிடும் போது, “எங்களுக்கு நீதி என்ற பெயரில் குற்றவாளிகளை அழைத்து வந்து  எங்கள் கண் முன் தொங்கவிட்டாலும் எந்த பயனும் இல்லை. முழு குடும்பத்தையும் இழந்து விட்டு தனித்து நின்கிறேன். என் கண் முன் பிள்ளைகள் உடல் சிதறி உயிரிழந்தார்கள்” என கோபத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

அநுரவிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்திய சிங்கள மக்கள் | Sri Lanka Easter Bombings Anura Meet People

அதேபோன்று அங்கிருந்து பல பாதிக்கப்பட்ட உறவினர்களும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.