முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்: பாராட்டு தெரிவித்துள்ள கண்காணிப்பு குழுக்கள்!

இலங்கையில் (Sri lanka) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் அமைதியாகவும், பெரிய வன்முறைச் சம்பவங்களோ, இடையூறுகளோ இன்றியும் நடைபெற்றதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், தேர்தலை வெற்றிகரமாக முடிக்க உதவிய தேர்தல் ஆணையகம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரை அவர்கள் பாராட்டியுள்ளனர்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பின் தகவல்படி, நேற்று 108 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

ஜனாதிபதி தேர்தல்

எனினும், அதில் எதுவுமே பாரதூரமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்: பாராட்டு தெரிவித்துள்ள கண்காணிப்பு குழுக்கள்! | Sri Lanka Election Observers Praise

அதேவேளை, இந்த தேர்தல் அமைதியாக நடத்தப்பட்டதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய கண்காணிப்பாளர் குழுவின் மக்கள் தொடர்பு மற்றும் ஈடுபாடு அதிகாரி Temitope Kalejaiye விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்த விரிவான கண்ணோட்டம் நாளை திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை 

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முழுவதையும் தமது அமைப்பு முழுமையாக கண்காணித்து வருவதாக பெப்பரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்: பாராட்டு தெரிவித்துள்ள கண்காணிப்பு குழுக்கள்! | Sri Lanka Election Observers Praise

குறித்த 54 வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்