நாட்டில் இரண்டு மாதங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக அரசாங்கத்தில் யாரும் அறிக்கை வெளியிடவில்லை என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க(Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அத்தகைய இருப்பை பராமரிக்க தேவையான சேமிப்பு வசதிகள் இல்லை என்றும் அதன்போது பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் அரசாங்கங்கள் மீது குற்றச்சாட்டு
அத்துடன், முந்தைய அரசாங்கங்கள் இந்த நோக்கத்திற்காக சேமிப்பு வசதிகள் மற்றும் எண்ணெய் போக்குவரத்து குழாய் அமைப்புகளை கட்டவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எண்ணெயின் அளவு ஓர்டர் செய்யப்பட்டுள்ளதாக மட்டுமே அரசாங்கம் கூறியுள்ளது என்றும் ஓர்டர்கள் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.