Courtesy: H A Roshan
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் ஆராயும் கூட்டம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டம் கிண்ணியாவில் நடந்துள்ளது.
இதன்போது, திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா, தம்பலகாமம், மூதூர், குச்சவெளி, திருகோணமலை பட்டணமும் சூழலும், கந்தளாய், சேருவில ஆகிய பிரதேச சபைகளுக்கும், கிண்ணியா நகர சபை மற்றும் திருகோணமலை மாநகர சபை ஆகியவற்றிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் ஆராயப்பட்டது.
கட்சி முக்கியஸ்தர்கள்
இக்கூட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ் தௌபீக், மாவட்டத்தைச் சேர்ந்த உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.