புதிய அரசாங்கம் பதவியேற்று மூன்று மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்த அரசாங்கத்தினால் முடிந்ததாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் (Kalutara) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சு
மேலும் நிதியமைச்சு உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான தெளிவான தீர்மானங்களை ஜனாதிபதியால் எடுக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய முதலீடுகளை கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நிறுத்தப்பட்டிருந்த பல வெளிநாட்டு நிதியுதவி திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் நாட்டில் நம்பிக்கையை கட்டியெழுப்பியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், கடந்த காலங்களில் பங்குச் சந்தையும் வலுவான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.