குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு கடவுச்சீட்டு செய்து கொடுக்கும் தரப்புக்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அண்மைய நாட்களாக பாதாள உலகத்துடன் தொடர்புடைய நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருவதுடன் பல அதிர வைக்கும் கொலைகளின் பின்னணிகளும் அம்பலமாகி வருகிறது.
வேட்பு மனு
இவ்வாறான பின்னணியில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கிராம மட்டங்களிலும் பலமடைந்து வருகின்றது.
மாகாண சபைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே தேர்தலில் போட்டியிடும் விதம் பற்றி முடிவெடுக்கப்படும்.
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வேட்பு மனு வழங்கும் போது, வேட்பாளர்கள் தொடர்பில் காவல்துறை சான்றிதழொன்று பெறப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு செய்து கொடுக்கும் தரப்புகள்
போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களா என்பது பற்றி ஆராயப்படும்.
குற்றவாளிகள் நாட்டைவிட்டு தப்பியோடுவதற்கு கடவுச்சீட்டு செய்து கொடுக்கும் தரப்புகள் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.