முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எமது அரசில் வடக்கு தெற்கு என்ற பிரிவில்லை: உறுதிப்படுத்திய அநுர

வடக்கிற்கு எதிரான தெற்கின் அரசியலும், தெற்கிற்கு எதிரான வடக்கின் அரசியலும் இருந்த போதிலும், இந்த தேர்தல் முடிவுகளின்படி நாம் மேலும் பிளவுபட வேண்டிய தேவை இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். 

இலங்கையின் (Sri Lanka) புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்வு இன்றையதினம் (18.11.2024) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும்.

மக்களின் கடின உழைப்பு 

மக்களின் கடின உழைப்பு மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் வெற்றியடையச் செய்யும் வகையில் நல்லாட்சி இருக்க வேண்டும்.

“வெற்றி பெரியது, அந்த வெற்றிக்காக நம் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகள் சமமானவை.” இலங்கையின் வரலாற்றின் அரசியல் வரைபடம் மாற்றமடைந்துள்ளது.

பிரிவினை அரசியல் இனியும் தேவையில்லை என்பதை இத்தேர்தல் நிரூபித்துள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு வலுவான மக்கள் ஆணையை வழங்க முயற்சித்த அனைத்து மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தியின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து மக்களின் ஆதரவும் தேவை என தெரிவித்த ஜனாதிபதி, தோற்றவர்களை காயப்படுத்திய வரலாற்றை மாற்றி புதிய அரசியல் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எமது அரசில் வடக்கு தெற்கு என்ற பிரிவில்லை: உறுதிப்படுத்திய அநுர | Sri Lanka President Speech Tamil

இத்தேர்தலில் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமூக ஊடக செயற்பாட்டாளர்களாக முன்வந்து செயற்பட்ட இளம் சமூகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர், அவர்களுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மறுமலர்ச்சி யுகம்

மேலும் இந்தத் தேர்தலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எழுந்து நின்றதாகவும், அவர்கள் அனுபவிக்கும் அடக்குமுறையே இதற்குக் காரணம் என்று கூறிய ஜனாதிபதி. இந்தத் தேர்தல் முடிவு அவர்களின் சுதந்திர பேச்சு எனவும் தெரிவித்துள்ளார்.

எமது அரசில் வடக்கு தெற்கு என்ற பிரிவில்லை: உறுதிப்படுத்திய அநுர | Sri Lanka President Speech Tamil

எனவே, பிரஜைகளுக்கு பகுதியளவு சுதந்திரத்தை வழங்க தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையை மறுமலர்ச்சி யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/ymLPHflFKtg

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.