முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிபர் தேர்தலைப் பிற்போட முடியாது : மகிந்த தேசப்பிரிய அறிவிப்பு

சிறிலங்காவின் அதிபர் தேர்தலை (Presidential Election) செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் மகிந்த தேசப்பிரிய இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

செப்டெம்பர் 20 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 17 திகதிக்குள் அதிபர் தேர்தலை நடத்த வேண்டும்.

இந்த தேர்தலை பிற்போட முடியும் என எவரேனும் கூறினால், அவர்களின் மூளையை பரிசோதனைக்குட்படுத்தி பார்க்க வேண்டும்.

தேர்தல்கள் ஆணைக்குழு

எக்காரணத்தினாலும் தேர்தலை பிற்போடுவது என்பது தவறு.

வானமே இடிந்து தலைமேல் விழுந்தாலும் அதிபர் தேர்தலை மட்டும் பிற்போட முடியாது.

அதிபர் தேர்தலைப் பிற்போட முடியாது : மகிந்த தேசப்பிரிய அறிவிப்பு | Sri Lanka Presidential Election Cant Be Postponed

தேர்தலுக்கான முதற்கட்ட வேலைத்திட்டங்கள் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

அதுகுறித்து நாம் ஆராயப்போவதில்லை. அதற்கான உரிமையும் எமக்கு இல்லை.

அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு அதன் கடமைகளை, உண்மையுடனும், நேர்மையுடனும் செய்யும் என கண்காணிப்பு அமைப்பு என்ற வகையில் நாம் நம்புகின்றோம்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்

தற்போது மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. இதனை சில கட்சிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வாக்கு வேட்டையில் ஈடுபடுவதைத் தடுக்கவேண்டும்.

அதிபர் தேர்தலைப் பிற்போட முடியாது : மகிந்த தேசப்பிரிய அறிவிப்பு | Sri Lanka Presidential Election Cant Be Postponed

தேர்தல் காலத்தில் இவ்வாறான அபிவிருத்திகள் கட்சி சார்ந்து முன்னெடுக்கப்படுவதை கண்காணிப்பு அமைப்புகள் கவனத்தில் எடுக்கவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்