என்னைப் போலவே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெறாத ஜனாதிபதிதான் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில்(Negombo) இன்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அநுரவின் ஆட்சி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைப் பார்த்தால் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சி, மூன்று மாதமா அல்லது மூன்று வாரமா என்று எனக்குத் தெரியவில்லை.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு(Anurakumara Dissanayakara) பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே அவர் நாட்டையும் நாடாளுமன்றத்தையும் கொண்டுச் செல்ல முடியும்.
தோல்வியை ஏற்றுக் கொள்கின்றேன்
தேர்தலில் தோற்றால் வீட்டிலேயே இருங்கள் என்று என்னைப் பார்த்துச் சொல்கின்றார்கள். ஆமாம், நான் தேர்தலில் தோற்றேன். அதை ஏற்றுக் கொள்கின்றேன்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுத்து மக்களிடம் ஆணையை கேட்டேன். ஆனால் பெரும்பான்மை மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் 51 சதவீத வாக்குளைப் பெறவில்லை. அவருக்கும் பெரும்பான்மையை மக்கள் வழங்கவில்லை. எனவே அவரும் என்னைப் போலத்தான் என குறிப்பிட்டுள்ளார்.