முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரவி கருணாநாயக்கவின் கூற்றை நிராகரித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சி

Courtesy: Sivaa Mayuri

பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு எரிவாயு கொள்கலன் சின்னத்தைப் பயன்படுத்திய புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளருக்கு தேசியப் பட்டியல் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தேர்தல் உடன்படிக்கை இருந்ததாக கூறப்படுவதை ஐக்கிய தேசியக்கட்சி மறுத்துள்ளது.

தேசிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க கூறிய இந்தக்கூற்றை ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன மறுத்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான வேட்பாளர்களை தீர்மானிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நவம்பர் 16ஆம் திகதி தேசிய ஜனநாயக முன்னணி கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் கூட்டம் நடத்தப்பட்டது.

இறுதி முடிவு

அந்தக் கூட்டத்தில் நவம்பர் 19ஆம் திகதியன்று மீண்டும் கூடி இறுதி முடிவு எடுக்க முடிவு செய்யப்பட்டது.

எனினும், நவம்பர் 18ஆம் திகதியன்று, தேசிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் சியாமளா பெரேரா, தேசியப்பட்டியலை ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கவேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தினார். இருப்பினும் விக்ரமசிங்க அவரைப் பரிந்துரைக்க மறுத்துவிட்டார்.

ரவி கருணாநாயக்கவின் கூற்றை நிராகரித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சி | Unp Rejected Ravi Karunanayake Claim

இந்தநிலையிலேயே கருணாநாயக்கவின் பெயரை முன்மொழிவதற்கு சியாமளா பெரேரா நடவடிக்கை எடுத்ததுடன், அந்த பெயரை வர்த்தமானியில் வெளியிடுவதற்காக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்ததாக வஜிர அபேவர்த்தன தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் என்ற வகையில், நியமிக்கப்பட்டுள்ள நான்கு பேர் கொண்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக, ரவி கருணாநாயக்க ஒழுக்காற்று நடைமுறைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.