இலங்கையும் விரைவில் பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் கூட்டணியில் இணைந்து கொள்ளும் என்று இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் உறுதி அளித்துள்ளார்.
பிரிக்ஸ் (BRICS) என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கின. பின்னர் தென்னாப்பிரிக்கா அதில் சேர்க்கப்பட்டுள்ளது.
உலகில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட கவிதை எழுதும் கமரா
பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு
இந்த நாடுகளின் பெயர்களின் ஆங்கில முதல் எழுத்தைக் கொண்டே பிரிக்ஸ் கூட்டமைப்பு என்ற பெயர் உருவாக்கப்பட்டது. 2010ல் உதயமாகிய ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும்.
இதனை தொடர்ந்து பின் வந்த காலங்களில் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில் எகிப்து, எதியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் ஆகிய நாடுகள் இணைத்துக் கொள்ளப்பட்டதுடன் ஆர்ஜெண்டீனா மற்றும் சவூதி அரேபியா என்பனவும் இதன் அங்கத்துவத்தைப் பெற விண்ணப்பித்துள்ளன.
பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளெல்லாம் வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகி வருகிற நாடுகளாகும்.
கடந்த 2012 ஆம் ஆண்டின் படி இந்த ஐந்து நாடுகளின் கூட்டு மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் பாதியும், கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.6 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் அந்நிய செலாவணி கூட்டு கையிருப்பு 4 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகவும் காணப்படுகின்றது.
இந்நிலையில் அடுத்த வருடமளவில் இலங்கையும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படும் என்று இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் உறுதி அளித்துள்ளார்.
அவ்வாறு இலங்கை பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறும் பட்சத்தில் எரிபொருள் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பில் இலங்கை முன்னேற்றகரமான நிலையொன்றை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை
இலங்கை – ஈரானுக்கிடையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |