யாழ்ப்பாணம்(jaffna) பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகலைச் சேர்ந்த ரவித்த ரங்கன திஸாநாயக்க (வயது 35) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சார்ஜன்ட் தர அதிகாரியே உயிரிழந்தவராவார்.
பலாலி இராணுவ முகாமில் கடமை
2007 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்ட அவர் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நெஞ்சுவலி காரணமாக பலாலி இராணுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். எனினும், அவர் நேற்றுமுன்தினம் நண்பகல் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாகவே உயிரிழப்பு
இவர் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.